2011ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை 35,496 பெண்களுக்கு ரூ.123.21 கோடி திருமண நிதி உதவி வழங்கல் ஆட்சியர் தகவல்



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

பெண்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் சமூக நலத்துறையின் கீழ் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயம் முடித்த பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

2011ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயம் முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் என மொத்தம் 35 ஆயிரத்து 496 பெண்களுக்கு ரூ.123 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதிஉதவி தொகையும், ரூ.72 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு உள்ளது. திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம் பெறும் பயனாளிகள் திருமணத்திற்கு 45 நாட்கள் முன்னில் இருந்தே அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களின் வருவாய் சான்று, வகுப்பு சான்று, முதல் திருமணத்திற்கான சான்று, கல்வி சான்றுகளை இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்வதன் மூலம் அரசின் இத்தகைய நலத்திட்டத்தினை விரைந்து பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல பெண்களின் முன்னேற்திற்கென சமூக நலத்துறையின் மூலம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டமும் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மருமண விதவை திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments