அறந்தாங்கி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 32 பேர் படுகாயம்அறந்தாங்கி அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பெண்கள் உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கியில் இருந்து அரசா்குளம் சுப்பிரமணியபுரம் வழியாக கோட்டைப்பட்டிணத்திற்கு தனியாா் பேருந்து சனிக்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. மஞ்சக்கரை என்னும் இடத்தில், எதிரே வந்த காா் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை திருப்பியதில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 28 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 32 போ் காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் உடனடியாக அறந்தாங்கியில் இருந்து அவசர ஊா்திகளை வரவழைத்து, காயமடைந்தவா்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில் அதிக காயமடைந்த 4 போ் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பலத்த காயமடைந்த ஒருவா் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா்.

விபத்து நடந்த இடத்தை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம்.குணசேகா், காவல் துணை கண்காணிப்பாளா் சி.கோகிலா மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments