5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போ ?



தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் இருந்தது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது என கூறி வந்த மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் சட்டதிருத்ததை கொண்டு வந்து அதனை அரசிதழில் வெளியிட்டது.

அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படும். இதில் தோல்வியுறும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தோல்வியுற்றால் அதே வகுப்பிலேயே அவர்கள் தொடர வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்த 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான கட்டாய பொதுத்தேர்வு முறைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 8 ஆம் வகுப்பு தேர்வு 2020ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும். 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்.

5ம் வகுப்பு அட்டவணை:

ஏப்.,15 - தமிழ்
ஏப்.,17 - ஆங்கிலம்
ஏப்.,20 - கணிதம்

8ம் வகுப்பு அட்டவணை:

மார்ச் 30 - தமிழ்
ஏப்.,2 - ஆங்கிலம்
ஏப்.,8 - கணிதம்
ஏப்.,15 - அறிவியல்
ஏப்.,17 - சமூக அறிவியல்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி 15 நிமிடங்களுக்கு தொடங்கி நண்பகல் 12 மணி 15 நிமிடங்கள் வரை இரண்டு மணி நேரம் நடைபெறும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், 5 நிமிடங்கள் விடைத்தாளை நிரப்புவதற்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments