புதுக்கோட்டை மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்.! பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் சார்பில் 7வது பொருளாதார கணக்கெடுப்பிற்கான செயலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் நேற்று (11.11.2019) துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா முழுவதும் நடத்தப்படும் 7வது பொருளாதார கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் விவரங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை கண்டறியவும், எதிர்கால திட்டமிடுதலுக்கும் பயன்பட உள்ளது. எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்களிப்பினை கண்டறியும் வகையில் பொருளாதார கணக்கெடுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு பணி பொது சேவை மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடு, கடைகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவைகள் கணக்கெடுக்கப்பட உள்ளது. இதேபோன்று வேளாண் உற்பத்தியை தவிர்த்து பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தொழில், உற்பத்தி, சேவை மற்றும் அமைப்பு சாராத நிறுவனங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.

மேலும் வீடு மற்றும் வீட்டிற்கு வெளியே நடைபெறும் தொழில் சார்ந்த சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கண்ட கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு  பொதுமக்கள் அவர்கள் கேட்கும் விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.டி.சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் ஜெயசங்கர், தேசிய புள்ளியியல் அலுவலக முதுநிலை புள்ளியியல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments