கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் பகுதியில் 8 மணி நேர மின்தடை: மக்கள் அவதிகோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் பகுதிகளில், நேற்று காலை 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
இதுசம்மந்தமாக கொடிக்குளம் உதவி பொறியாளரிடம் விசாரித்ததில் குமரப்பன்வயல் அருகில் வயல் வெளியில் மின்கம்பம் சாய்ந்திருப்பதாகவும், அதை சுமார் 40 மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இதன் காரணமாக நேற்றைய தினம் மின்தடை ஏற்பட்டது. பிறகு முழுவதும் சரிசெய்யப்பட்டு மாலை 6.45 மணிக்கு மின்சாரம் வினியோகித்தனர். ஆனால் இரவு பலத்த மழை பெய்ததால் 11:00 க்கு மீண்டும் மின்தடை செய்து, நள்ளிரவு , 12:00 மணிக்கு மின்சாரம் வினியோகித்தனர். எட்டு மணி நேரத்துக்கு மேல், மின்தடை செய்யப்பட்டதால், சுற்றுவட்டார மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments