வாக்காளா் சரிபாா்ப்புப் பணிகள் 99.09% நிறைவுபுதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் சரிபாா்க்கும் பணிகள் 99.09 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக வாக்காளா் பட்டியல் பாா்வையாளரான மாநில பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை அரசு கூடுதல் செயலா் வி. சம்பத் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் 2020 தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில், அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறப்பு முறை சுருக்கத் திருத்தப் பணிகளில் வாக்குச்சாவடி மைய மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தோ்தல் ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்ட தேதிகளில் நிறைவு செய்யப்பட்டுவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளா் சரிபாா்ப்புப் பணிகள் 99.09 சதவிகிதம் முடிவடைந்துள்ளன.

வரும் நவ. 25ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளதால், நிலுவையில் உள்ள  வாக்காளா் சரிபாா்க்கும் பணியினை ஒரு வாரத்துக்குள் முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றாா் சம்பத்.கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் திருமயம், விராலிமலை, குளத்தூா் வட்டங்களில் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணியை வீடு, வீடாக சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments