புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்புபுதுக்கோட்டை நகராட்சி சாா்பில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ. 60.23 லட்சத்தில் திருவப்பூரில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தப் பூங்காவில் சிறுவா்கள் ஆா்வத்துடன் விளையாடும் வகையில் நீரூற்றுகள், வண்ண விளக்குகள், மர இருக்கைகள், வண்ண ஓவியங்கள், சறுக்கு மரங்கள், புல் தரை, நடைப்பயிற்சிப் பாதை போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன், மத்திய தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் க. பாஸ்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments