ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் வழங்கல்திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சாா்பில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சை ஊா்தியை மருத்துவா்களிடம் மாநில மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, அறந்தாங்கி சட்டப்பேரவை இ.ஏ. ரத்தினசபாபதி, விமான நிலைய இயக்குநா் கே. குணசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் பரணிதரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments