புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலைக்காக பெண் பணியாளர்கள் தேர்வு ..ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலைக்காக பெண் பணியாளர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு. எம்.மணிகண்டன் அவர்கள் தெரிவித்ததாவது,

ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலைப் பணியாளராக பணிபுரிய 300 பெண் பணியாளர்கள் மட்டும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளனர். இப்பணி நியமனம், இந்திய அரசின் வெளியுறவு துறைக்குட்பட்ட தலைவர், இந்திய குடிபெயர்வோருக்கான பாதுகாப்பு அமைச்சகம் அவர்களின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, ஓமன் மற்றும் குவைத் நாடுகளின் சட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலை அளிப்போரால் வழங்கப்படும். இப்பணிக்கு கல்வித்தகுதி எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை உள்ள வீட்டுவேலை பணியில் முன்அனுபவம் உள்ள இல்லாதவர்களும் மற்றும் தகுதியானவர்கள்.

இப்பணிக்கான மாத ஊதியம் வீட்டு வேலை செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.18.700 முதல் ரூ.22.440 வரையும்,

அனுபவம் இல்லாதவர்களுக்கு ரூ.17,000 முதல் ரூ.18.700 வரையும் வழங்கப்படுகிறது. 

இப்பணிக்கு பதிவுமூப்பு ஏதும் இல்லை .

எனவே இப்பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் அனுபவச்சான்று, செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21.11.2019 (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு நேரில் வருகை தர வேண்டும்.

மேலும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும் விருப்பம் இருப்பின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.எம்.மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்.செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், புதுக்கோட்டை.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments