அறந்தாங்கி பகுதி பொதுமக்கள் கவனத்திற்கு...அறந்தாங்கி பகுதி பொதுமக்கள் தொடா்பு கொள்ள புதிய செல்லிடப்பேசி எண்ணை வட்டாட்சியரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அறந்தாங்கி நகரில் இயங்கி வந்த வட்டாட்சியா் அலுவலக கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, தற்போது அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், நாயக்கா்பட்டியிலுள்ள எஸ்.எம்.ஆா் திருமண மண்டபத்தில் வட்டாட்சியரகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இப்பகுதியில் பிஎஸ்என்எல் கேபிள் இணைப்பு இல்லாத காரணத்தால், பேரிடா் காலத்திலும் அவசர நிலையிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ள தற்போது புதிதாக பெறப்பட்ட 9361973878 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments