அதிரை இமாம் ஷாபி பள்ளியில் பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்டு நடைபெற்ற குர்ஆண் மனனப் போட்டிகள் !!



அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29.10.2019 செவ்வாய் காலை 9:00 மணியளவில் “பள்ளிகளுக்கு இடையேயான பாங்குப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி மேலும் கிராஅத் போட்டிகள்” நடத்த முடிவுசெய்து அவ்வகையே ஏனைய பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்து இனிதே நடைபெற்றது.
அதன்படி, அழைப்பினை ஏற்று அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29.10.2019 செவ்வாய் காலை 9:00 மணியளவில்

1.இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

2.காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

3.பிரில்லியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி_முத்துப்பேட்டை

4.அபு மெட்ரிகுலேஷன் பள்ளி புதுப்பட்டினம்

5.அல் ஹுதா மெட்ரிகுலேஷன் பள்ளி கட்டுமாவடி

ஆகிய ஐந்து பள்ளிகளில் இருந்து சுமார் 38 மாணவர்கள் இப்போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். உள்ளூர் மத்ரஸாக்களில் ஆசிரியர்களாக பணியாற்றும் ஆலிம் உலமாக்கள் நடுவர்களாக இருந்து இப்போட்டிகளை சிறப்பாக நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விபரங்கள் வருமாறு:

பாங்கு போட்டி

1. M.முஹம்மது சலீம் IX A இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

2. M.I.அப்துர் ரஸ்ஸாக் IX E காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

3. Z.முஹம்மது VIII A அல்-ஹுதா மெட்ரிகுலேஷன் பள்ளி_கட்டுமாவடி

குர்ஆன் மனனப் போட்டி:-

1. R.ஷேக் ஹகீம் VI B அபு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புதுப்பட்டினம்

2. A.ஹாரூன் ரஷீத் VIII A அல்-ஹுதா மெட்ரிகுலேஷன் பள்ளிகட்டுமாவடி

3. M.S.முஹம்மது சமீஹ் VI B இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

4. H.முஹம்மத் இஸ்ஹாக் VI A இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அதிராம்பட்டினம்

5. M.I.சஹ்ல் V A இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அதிராம்பட்டினம்

கிராஅத் போட்டி:-

1. J.முஹம்மத் ஷாஃபீக் VI A அல்-ஹுதா மெட்ரிகுலேஷன் பள்ளி_கட்டுமாவடி

2. M.அஹ்மத் ஃபாயிஸ் VII B பிரில்லியண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி_முத்துப்பேட்டை

3. A.முஹம்மது ஜெய்த் VII A இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

4. M.ஷர்ஃபுத்தீன் V A இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி_அதிராம்பட்டினம்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மேலும் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு துஆ, அதனைத்தொடர்ந்து விருந்து உபசரிப்புடனும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பங்குபெற்ற ஏனைய பள்ளிகளில் இப்போட்டிகள் நடத்தினால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தும் பகிரப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments