புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா சலவைப் பெட்டிகள் பெற விண்ணப்பிக்கலாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா சலவைப்பெட்டிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சலவைத் தொழிலில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தைச் சாா்ந்த மக்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மூலம் ஆண்டு தோறும் விலையில்லா சலவைப்பெட்டி வழங்கப்படுகிறது.

இந்த பெட்டியைப் பெற பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிகழாண்டில் (2019-20ஆம் ஆண்டுக்கு) 100 விலையில்லா சலவைப் பெட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பூா்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடனும் விண்ணப்பித்துப் பயனடையலாம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments