கோபாலப்பட்டிணத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம்புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (11.11.2019) காலை 8 மணி முதல் 9 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் ஜில்லென்று இருந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த மாதங்களுக்கு முன்பு வரை கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் ,

தற்போது கடந்த சில தினங்களாக பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல கன மழை பெய்தது, மக்கள் பயன்பாட்டுக்குரிய குளங்கள் அனைத்தும் நிரம்பியது.

தற்போது கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், சிறியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .
புகைப்படங்கள் உதவி: முகமது அப்துல்லாஹ்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments