அறந்தாங்கியில் திருமண மண்டபத்திற்கு சீல் வைப்புஅறந்தாங்கியில் அனுமதியின்றி கட்டப்பட்ட திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி ஆணையா் இரா.வினோத் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தாா்.
அறந்தாங்கி பழைய ஆஸ்பத்திரி சாலையில் புதுகை கூட்டுறவு வங்கி அருகில் கிருஷ்ணன் மகன் சுப்புராமன் என்பவரால் நகராட்சி அனுமதியின்றி திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபா் ஒருவா் கடந்த ஆண்டு தொடா்ந்த வழக்கில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை பூட்டி சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் நகராட்சி ஆணையா் இரா.வினோத், வருவாய்த்துறையினா் மற்றும் காவல்துறையினா் முன்னிலையில் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை பூட்டி சீல் வைத்தாா்.  -

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments