புதுக்கோட்டையில் நடைபெற்ற உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்படட சமூகத்தின் உரிமைகளை பெற்று தருவதில் தொடர்ந்து போராடும் இயக்கமாக தேசியளவில் செயல்படுகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தின் மூலம் கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சர்வ சிக்ஷா கிராம் என்கிற முழுமையான கல்வி கிராமத்தை ஏற்படுத்துதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற எண்ணற்ற கல்வி சேவை செய்வதில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னணியில் நிற்கிறது.

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் சார்பாக உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து 9 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உதவி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியதாகவும், பொருளாதார சிரமத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு உதவியாகவும் இருந்து வருகிறது. முதலில் 3 இலட்சமாக 2010-ஆம் ஆண்டில் துவங்கி 2011ம் கல்வி ஆண்டில் 7 இலட்சமாகவும், இதனை தொடர்ந்து அதிகபடியான தேவையுடைய மக்களை உதவிகள் சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த கல்வி ஆண்டு (2019-2020) 20 இலட்ச ரூபாய் வழங்கவும் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அதிக பயனாளிகள் பயன் பெறுவார்கள். தமிழகம் முழுவதும் 10 பகுதிகளில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கயுள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட  பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சமூக மேம்பாட்டுத்துறையின் புதுக்கோட்டை மாவட்ட ஒருக்கினைப்பாளர் Er.B.வாசிம் அக்ரம் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் புதுகை மாவட்டத்தலைவர் ஜனாப் அபுபக்கர் சித்திக் அவர்களும் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கினைப்பாளர் ஜனாப்.முகமது இப்ராகிம் அவர்களும் சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் புதுகை மேற்கு மாவட்ட தலைவர்  H.சலாகுதீன் அவர்கள்,புதுக்கோட்டை கல்வி அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளர் S.பீர் முகம்மது அவர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

உயர் கல்விக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் ஜனாப்.அபுபக்கர் சித்திக் அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார்கள்

இதில் 25 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இறுதியாக ஜனாப்.முபாரக் அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



தகவல்: செய்யது இப்ராஹிம், கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments