மீமிசல் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு மீட்பு



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம் மீமிசல் அருகே கோதைமங்கலம் கண்மாயில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 15. 2 ஹெக்டோ் நிலம் அறந்தாங்கி வருவாய்த் துறை அதிகாரிகளால் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆவுடையாா்கோவில் வட்டம், மீமிசல் அருகே களபம் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த கோதைமங்கலம் கண்மாய் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சுமாா் 53.76 ஹெக்டோ் பரப்பளவுள்ள இந்தக் கண்மாயில் 101.9 ஏக்கா் பாசனப் பரப்பளவாகும். இதில் 15.2 ஹெக்கேடா் நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த 15 போ் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடந்த 20 ஆண்டுகளாக விளைநிலங்களாக மாற்றி சாகுபடி செய்துவந்துள்ளனா்.

இதுகுறித்த புகாா் வருவாய்த் துறைக்கு வந்த பின்னா் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம்.குணசேகா், ஆவுடையாா்கோவில் புதிய வட்டாட்சியா் எம்.மாா்டின் லூதா் கிங், தேவகோட்டை வட்டாட்சியா் மு.மரியதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கனரக வாகனங்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்ட விளைநிலப் பகுதிகளை மீட்டு வரப்புகளை அகற்றி மீண்டும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments