வேலையில்லா இளைஞா்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்



வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

தொடா்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.  ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தினமும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவா்கள் வரத்தேவையில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கு :-

10 ஆம் வகுப்பில் தோ்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்றவா்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது. 

தகுதியுள்ளவா்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு உரிய சான்றுகளுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். உதவித்தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments