சவூதி செந்தமிழர் பேரவை ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாம்..
மாவீரர் தினத்தை முன்னிட்டு சவூதி செந்தமிழர் பேரவை ரியாத் மண்டலம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரியாத் கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் (சுமைஸி) மருத்துவமனையில் 22.11.19 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த குருதிக்கொடை முகாமில் சவூதி செந்தமிழர் பேரவை ரியாத் மண்டலத்தின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 28 சகோதரர்கள் ரத்த தானம் வழங்கினர்.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த கலீல் அகமது, முகம்மது இஷாக் ஆகிய சாகோதரர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
தகவல்: கலீல் அகமது
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments