மெட்ரோ ரயில் நேரத்தை அறிய சென்னை விமான நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகைசென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நேரத்தை அறிய டிஜிட்டல் நேரப் பலகைகளை மெட்ரோ ரயில் மற்றும் விமான நிலைய நிர்வாகம்  இணைந்து நிறுவியுள்ளன.

சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் முக்கியமான நிலையமாக விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. நாள்தோறும் 7 ஆயிரம் பேர் வரையில் விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பியவர்கள் மெட்ரோ ரயிலின் நேரத்தை அறிவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே வந்து அதன் நேரப்பட்டியலை அறியவேண்டிய நிலை இருந்தது.

எனவே, இதை கருத்தில் கொண்டு விமான நிலைய நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து சென்னை விமானநிலையத்தில் டிஜிட்டல் நேர தகவல் பலகைகளை அமைத்துள்ளன.

விமான பயணிகளுக்கு தடையில்லா சேவை கிடைக்கும் வகையில் இந்த டிஜிட்டல் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் இதுபோன்ற டிஜிட்டல் நேர பலகைகளை அமைக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments