புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல், குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோபாலப்பட்டிணம் மதீனா தெரு (காட்டுக்குளம் தெரு) காட்டுக்குளம் பள்ளிவாசல் அருகில் உள்ள காட்டுக்குளத்தில் தண்ணீர் கடந்த ஓராண்டுக்கு மேல் ஆகியதால் குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசியது.
எனவே காட்டுகுளத்தில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றி விட்டு புதிய நீரை நிரப்ப அப்பகுதி மக்கள் GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் GPM சீரமைப்பு குழுவின் பொருளாதாரத்தில் மோட்டார் பம்பு செட் மூலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் குளத்து நீரை வெளியேற்றி பிறகு தரை காயவைக்கப்பட்டு விரைவில் புதிய நீர் விடப்படும் என்று GPM சீரமைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையில் கோபாலப்பட்டிணத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் கன மழையால், மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் வேகமாக நிரம்பியது.
குளிக்க வரும் மக்கள், குளத்துக்கரையில் நின்று புகைப்படம் எடுத்தும், குளத்தில் நீராடியும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுக்குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளவை எட்டியுள்ளது மட்டுமல்லாது முன்னர் வற்றி கிடந்த குளம் இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனால் வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் உறவுகள் நாம் எப்பொழுது இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.
அல்லாஹ் தன் திருமறையில்,
‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடுகிறான்
GPM மீடியா சார்பாக கோபாலப்பட்டிணத்தில் சில முக்கிய பணிகளை செய்து வரும் GPM சீரமைப்பு குழுமத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் ஊரில் உள்ள முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் குளத்தை சுற்றி பனை விதைகளையும் இந்த மழை காலத்தில் விதைத்தால் அவை நிலத்தடி நீரை பாதுகாக்கும் மற்றும் வரக்கூடிய சந்ததிகள் வளமான சுற்றுசுழலுடன் வாழ ஏதுவாக இருக்கும் என GPM மீடியா சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: ஆலோசனைக்குழு, GPM சீரமைப்பு குழுமம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.