பாஜக எம்எல்ஏவால் பாலியலுக்குள்ளான பெண் தீ வைத்து எரிப்பு..!உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவில் பாலியல் பலாத்காரம் செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தில் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் அந்த பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் ஏற்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த மார்ச்சில் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் திரிவேதி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சிவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ரே பரேலி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது சிவம், தலைமறைவாக இருந்த சுபம் ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து ரயில் நிலையம் அருகேயே அந்த பெண்ணை கடுமையாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். இதையடுத்து பயங்கர தீக்காயங்களுடன் அந்த பெண் மீட்கப்பட்டார்.

சிவம், சுபம் உள்பட 5 பேர் தன்னை கடுமையாக தாக்கி எரித்ததாக அந்த பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிவம், சுபம் உள்பட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு விட்டது.

இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு லக்னோவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அந்த பெண் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அந்த பெண் நேற்று இரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments