புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணா மலைப்பட்டியில் கோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு - தைரியமாக பிடித்த இளைஞர்கள்



புதுக்கோட்டை  அன்னவாசல் அருகே குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளமும் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணா மலைப்பட்டியில் உள்ள காதரப்பா வீதி குடியிருப்பு பகுதியில் ரபீக் என்பவர் வீட்டுக்கு பின்புறம் கோழி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அப்பொழுது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்த பொழுது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்துள்ளது. 


இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பாம்பை பிடிக்க முயன்றனர். யாருக்கும் பிடிகொடுக்காமல் பாம்பு போக்கு காட்டியது. இதையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மலைப்பாம்பை அவர்கள் பிடித்தனர். பின்னர், அந்தப் பாம்பை பிடித்த இளைஞர்கள் ஒரு சாக்கு பையில் அடைத்து பின்பு வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வனத்துறை அலுவலர் மூலம்  நார்த்தாமலை உள்ள வனப்பகுதிக்குள் பாம்பினை கொண்டு சென்று விட்டனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும் 20 கிலோ எடையும் இருந்தது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments