புதுக்கோட்டை மாவட்டத்தில் 14, 15ம் தேதி வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாதுபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 14.12.2019 மற்றும் 15.12.2019 ஆகிய இருதினங்கள் பெறப்படமாட்டாது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தாவது:

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களுக்கு 9.12.2019 முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்திட 16.12.2019ம் தேதி கடைசி நாளாகும்.

14.12.2019 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது, இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments