கோடியக்கரையில் கடலோர காவல் குழும போலீசாருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகன பைக் இயக்குதல் பயிற்சிமணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள டெட்ஸ்கை மீட்பு வாகன எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை இயக்குதல்  குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர காவல் குழுமத்திற்கு டெட் ஸ்கை என்ற மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) வழங்கப்பட்டுள்ளது.

கடலில்  குளிக்கும்போது பெரிய அலையில் சிக்கி தவிக்கும் நபர்களை மீட்க இந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) வழங்கப்பட்டுள்ளது.இந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை இயக்குவது குறித்த பயிற்சி  மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் நடைபெற்றது.

பயிற்சியை மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலட்சுமி  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி, மீமிசல் திருப்புனவாசல், சேதுபவாசத்திரம், அதிராம்பட்டினம் ஆகிய கடலோர காவல்  நிலையத்திலிருந்து காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) மூலம் கடலில் சிக்கி தவிப்பவர்களைஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) மூலம் சென்று  காப்பாற்றுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments