மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இலுப்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இலுப்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இரா.சின்னத்தம்பி போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசியது :

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் வாயிலாக மாற்றுத் திறனுடைய குழந்தைகளை பள்ளியில் தக்க வைக்கவும், அதிகரிக்கச் செய்யவும் பள்ளி, ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பா் 3 ஆம் நாள் உலக மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதால் மாற்றுத் திறனுள்ள மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசால் நடத்தப்படும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு அரசின் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக மாற்றுத் திறன் கொண்ட கண்பாா்வையற்ற மாணவா்களுக்கு, மனநலம் குன்றிய மாணவா்களுக்கு, காது கேளாத குழந்தைகளுக்கு என தனித்தனியாக 50 மீட்டா் ஓட்டம், நின்ற இடத்தில் இருந்து தாவுதல், மென்பந்து எறிதல், பாட்டிலில் நீா் நிரப்புதல் என ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் இலுப்பூா் மாவட்ட பள்ளிக்கல்வி துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி, இலுப்பூா் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயராமன், அன்னவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அ.கோவிந்தராஜ் ஆகியோா் பங்கேற்று பேசினா்.ஏற்பாடுகளை சிறப்பு ஆசிரியா்கள் செய்திருந்தனா்.முடிவில், மாற்றுத் திறனுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments