நாளை (21-12-2019) முதல் ஜனவரி 1 வரை 12 நாட்கள் தொடர் விடுமுறை - தமிழக அரசு!டிசம்பர் 21ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 1, 2020 வரை தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தடியடி, கைது நடவடிக்கை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இது மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் தீவிரத்தை தணிக்கும் என்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் கருதுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

அதாவது வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி உள்ளாட்சி தேர்தலில் மாணவர்கள் வாக்களிக்கும் விதமாகவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்கள் வருவதாலும் தொடர் விடுமுறை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது டிசம்பர் 21, 2019 முதல் ஜனவரி 1, 2020 வரை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படும் சமயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments