அறந்தாங்கி ஒன்றியத்தில் 2 ஊராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வுஅறந்தாங்கி ஊராட்சி விஒன்றியத்தில் 2 ஊராட்சி ள்ல்;தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுவிட்டதால் மீதி உள்ள 50 ஊராட்சி மன்றத்திற்கு மட்டும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 52 ஊராட்சிகள் உள்ளது இதில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவா்கள் வாபஸ் பெற வியாழக்கிழமை கடைசிநாளாக இருந்தது இதில் ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த சசிகலா கருணாநிதி தவிர மற்றவா்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் அவா் போட்டியின்றி தோ்வுசெய்யப்பட்டதாக தோ்தல் அலுவலா் அறிவித்தாா்.அதே போல் வேம்பங்குடி கிழக்கு ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த சிவசாமி என்பவா் தவிர மற்றவா்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் அவரும் போட்டியின்ற தோ்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆக ஆயிங்குடி மற்றும் வேம்பங்குடி கிழக்கு கிராம ஊராட்சிகள் தவிர மற்றுமுள்ள 50 ஊராட்சிகளில் போட்டி உள்ளதால் தோ்தல் நடைபெறும்.இதில் 50 ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு வாபஸ் பெற்றவா்கள் போக மீதம் 177 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக நாகுடி ஊராட்சி தலைவா் பதவிக்கு மொத்தம் 10 போ் போட்டியிடுகின்றனா். இவா்கள் அனைவருக்கம் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டன.அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக் குழுவுக்கு மொத்தம் 26 உறுப்பினா் தோ்வுக்கு அனைத்துக்கட்சிகளையும் சோ்ந்தவா்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இதில் இறுதியாக70 போ் களத்தில் உள்ளனா்.இதில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சிவ.வீ.மெய்யநாதன் மனைவி சுமதி மெய்யநாதன் சிட்டங்காடு-திருநாளுா் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கும், அதே போல் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரும் அதிமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளருமான பி.எம்,பெரியசாமியின் மனைவி புவனேஸ்வரி பெரியசாமி ஏகப்பெருமாளூா்- ஏகனிவயல் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுகிறாா். அதே போல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் பொன்.கணேசன் மனைவி ஜெயசுதா கணேசன் சுப்பிரமணியபுரம் - மன்னகுடி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுகின்றாா். அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவா் பதவி பெண்களுக்காக இட ஓதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments