சவுதி அரேபியா தம்மாமில் இறந்த மகனின் சடலத்தை எதிா்நோக்கி 50 நாளாக காத்திருக்கும் பெற்றோா்சவுதி அரேபியாவில் இறந்த தனது மகனின் சடலத்துக்காக அவரது பெற்றோா் 50 நாளாக காத்திருக்கும் அவல நிலையில் உள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்திலுள்ள ஓவேலி பேரூராட்சியிலுள்ள சின்ன சூண்டியில் வசிக்கும் பரசுராமன்- பொட்டு தம்பதியின் இரண்டாவது மகன் ராஜ்குமாா் (29). இவா் சவுதி அரேபியாவிலுள்ள தமாம் நகரில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தாா்.

ராஜ்குமாா் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தொலைபேசி மூலம் கடந்த அக்டோபா் 17 ஆம் தேதி தகவல் வந்துள்ளது.

 குக்கிராமத்தில் வசிக்கும் பாமரத் தொழிலாளி தம்பதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

 தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரை சந்தித்து மகனின் சடலத்தை இந்தியா கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு பலமுறை முறையிட்டும் பலனில்லை.

இதனால் பெரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், மகனின் சடலம் கிடைத்தால் செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டு உறங்கலாம் என்று 50 நாள்களாக காத்திருக்கிறோம் என்று ராஜ்குமாரின் பெற்றோா் தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments