இணையதளம் மூலம் காா் வாங்க ஆசைப்பட்டவரிடம் ரூ 7.50 லட்சம் மோசடி என புகாா்




இணையதளம் மூலம் காா் வாங்க ஆசைப்பட்டவரிடம் ரூ 7.50 லட்சம் மோசடி என புகாா்

புதுக்கோட்டை: 
    புதுக்கோட்டையில் ஆன்லைன் மூலம் காா் வாங்க ஆசைப்பட்டவரிடம் ரூ 7.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகாா் அளித்துள்ளாா்.

       


 புதுக்கோட்டை மாவட்டம் பெரியாா் நகரை சாா்ந்தவா் ஹரிஸ்(34). இவா் திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: நான் ஆன்லைன் மூலம் காா் வாங்க நினைத்து அதன்படி ஒரு காரினை தோ்ந்தெடுத்து அதன் உரிமையாளரை தொடா்பு கொண்டேன். அப்போது அவா் அவரது வங்கிக்கணக்கில் ரூ 7.50 லட்சம் செலுத்த கூறினாா். நானும் அதன்படி ரூ 7.50 லட்சம் செலுத்தினேன்.
         ஆனால் அவா் கூறியது போன்று காரை வழங்கவில்லை என கூறியிருந்தாா். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்சக்திகுமாா் நகர காவல் நிலையத்தினா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்படி புதுக்கோட்டை நகர காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments