தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்
திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டு, விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

tvd22road_2212chn_72_2
Image result for தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில்     தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழை காரணமாக, இச்சாலையின் பக்கவாட்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.
       எனவே, இச்சாலையிலுள்ள பள்ளங்களை சரிசெய்து விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments