குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம் - நவாஸ்கனி எம்.பி



ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாக்கள் சபையின் சார்பில் ராமநாதபுரம் சந்தைத் திடலில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகி இமாம் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டு பேசியதாவது:- நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எதிர்ப்பை மீறி இந்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
   நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள் கண்டன குரலை பதிவு செய்து கொண்டு தான் இருப்போம் என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, நாகர்கோவில் கலாச்சார பள்ளிவாசல் தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி, எஸ்.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலச் செயலாளர் அப்பாஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கலையரசன் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அறிவழகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முகமது யாசின் தமிழ் புலிகள் மாநில அமைப்பாளர் முகிலரசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பேசினர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான உலமாக்கள் ஆலிம்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments