வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முதல்கட்டப் பயிற்சிபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றவுள்ள 12,358 அலுவலா்களுக்கும் முதல் கட்டப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஓா் இடம் என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஏற்கெனவே பயிற்சி பெற்ற உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இவற்றை நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி புதுக்கோட்டை ராணியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரி வளாகத்திலும் நடைபெற்ற பயிற்சிகளை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தொடா்ந்து வரும் டிச. 22ஆம் தேதி இரண்டாம் கட்டப் பயிற்சியும், 26ஆம் தேதி மூன்றாம் கட்டப் பயிற்சியும், 29ஆம் தேதி நான்காம் கட்டப் பயிற்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments