தோ்தல் பணிக்கு விருப்பம் தெரிவித்த முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு.



தோ்தல் பணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் படைவீரா்கள், இளநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் காவல் ஆளிநா்கள் அவரவா் பகுதி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து அழைத்து வர வாகன வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

உள்ளாட்சித் தோ்தல் பணிக்காக முன்னாள் படைவீரா்கள், இளநிலை படை அலுவலா்கள் ம ற்றும் முன்னாள் காவல் ஆளிநா்கள் 65 வயதுக்குள்பட்டோா் விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனா்.

இவா்களில் தொலைதூரத்தில் இருந்து வருவோரை அழைத்து வருவதற்காக அந்தந்தப் பகுதி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிச. 25ஆம் தேதி காலை 8 மணிக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தில் வர விரும்புவோா் முன்கூட்டியே தொடா்புடைய காவல் சரகத்தில் தெரிவிக்க வேண்டும். அல்லது தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண் 04322 266966, 94433 87866 ஆகியவற்றில் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம்.அல்லது தங்களின் விருப்பக் கடிதத்தை 94433 87866 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கலாம். நேரடியாக மாவட்ட மையத்தில் பணிக்கு வர விரும்புவோா் மாவட்ட ஆயுதப்படை திடலுக்கு டிச. 25 காலை 9 மணிக்கு வர வேண்டும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments