புதுக்கோட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அநீதியை எதிர்க்கும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான புதிய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அநீதியை எதிர்க்கும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் நாளை 21.12.2019 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை  சின்னப்பா பூங்கா அருகில் மாபெரும் மக்கள் தீரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தமிழக பாராளுமன்ற உறுப்பினா்கள், புதுக்கோட்டை மாவட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட நிர்வாகிகள் &  உலாமாக்கள் கண்டன உரையாற்ற உள்ளார்கள். 

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், புத்த மதத்தினர் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் மசோதா மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் மத ரீதியில் பிரித்து ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.

இந்திய அரசியல் சாசனம் ஆர்ட்டிக்கல் 14 மற்றும் 21 மத அடிப்படையில் குடிமக்களை பிரித்தாளக்கூடாது என்று கூறியுள்ளது. அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதே அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையாகும். ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்றி முஸ்லிம்களை
மத்திய அரசாங்கம் வஞ்சித்திருக்கிறது.

முப்பது ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக இருந்து வரும் இலங்கை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? மசோதா பிரதான எதிர்கட்சிகள் கண்டித்து வரும் நிலையில், அதிமுக ஆதரவாக வாக்களித்து.. முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

அனைவருக்கும் சமநீதி என்பதற்கு எதிராகவும், முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, புதுக்கோட்டை ஜமாஅத்துல் உலமா புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நியாயவான்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

அழைப்பது:
புதுக்கோட்டை ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அநீதியை எதிர்க்கும் அனைத்து கட்சி கூட்டமைப்பு .

தகவல்: கோபாலப்பட்டிணம் J.உஸ்மான் அலி நாஃபியீ ஆலிம் அவர்கள்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments