கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(CAA) திரும்பப்பெற வலியுறுத்தி மூன்று ஊர் ஜமாத் இணைந்து நடத்திய மாபெரும் பேரணி..!கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ரத்துசெய்ய வலியுறுத்தி மூன்று ஊர் ஜமாத் இணைந்து மாபெரும் கண்டன  ஊர்வலம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டிணம், திருமங்கலபட்டிணம் மற்றும் பிஆர் பட்டினம் ஊர் ஜமாத்தார்கள் இணைந்து நேற்று 19.12.2019 வியாழக்கிழமை அன்று  இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரான புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ரத்துசெய்ய வலியுறுத்தி மூன்று ஊர் ஜமாத் இணைந்து மாபெரும் கண்டன  ஊர்வலம் நடைபெற்றது. பேரணியானது மூன்று ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகிக்க  P.R. பட்டினம் N.S.M. நஜீபுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியை U.செய்யது அகமது, P.R. பட்டினம் ஜமாத் செயலாளர் அவர்கள் ஒருங்கிணைத்தார். இதில் அரசு பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மூன்று ஊர் ஜமாத்தார்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.


இந்நிகழ்வில் P.R. பட்டினத்தை  சேர்ந்த N.S.M. நஜீபுதீன் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் கூறியதாவது  இப்போது  இயற்றப்பட்டுள்ள சட்ட திருத்தமானது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொதிப்படைய செய்திருக்கிறது. இந்தியா இஸ்லாமிய மக்களை அந்நிய மக்களென்று அப்புறப்படுத்துகின்ற வேலையை ஆளுகின்ற அரசு இங்கே மிகப்பெரும் ஒரு மசோதாவாக ஏற்றி வெற்றிபெற செய்திருக்கிறது. இஸ்லாமியர்கள் அனைவர்களின் குடியுரிமையை பறிக்கின்ற சட்டத்தை இந்தியாவில் வாழ்கின்ற எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மாநில அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறாக கூறினார்.  

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments