வாகனங்களில் தேவையான உபகரணங்கள் இருப்பது அவசியம்’



ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி, இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்தி குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி (சைடு ரிவா் மிரா்) , இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதனை அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் உறுதி செய்ய வேண்டும். வாகனச் சோதனையின்போது, இவை இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments