புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ளாட்சித்தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.வி.அருண்சக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே.சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தோ்தல்கால நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

வேட்பு மனு தாக்கல் 9ஆம் தேதி தொடங்கி, 16ஆம் தேதி வரையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு செய்ய இயலாது.வேட்பு மனுக்கள் பரிசீலனை 17ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்.

முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டாா்கோவில், கந்தா்வகோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 27ஆம் தேதியும். 

இரண்டாம் கட்டமாக அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 30ஆம் தேதியும் தோ்தல் நடைபெறுகிறது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments