போலீஸை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை தூக்கிகொண்டு ஓடிய மர்ம நபர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்புபுதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற வாக்குப்பெட்டி போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 

கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என கிராமப்புறங்களை சார்ந்த பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை5 மணிக்கு நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்படித்தான் வாக்கு எண்ணிகை மையத்துக்கு அனுப்புவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு, வாக்குக்சாவடியின் பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பட்டியை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

இதையடுத்து உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீலை உடைக்கும் முன்பே பத்திரமாக மீட்டனர். வாக்குப்பெட்டியை திருடிச் சென்ற 2 பேரை போலீசார கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments