உள்ளாட்சி தேர்தலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் எத்தனை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 13,965 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக அன்னாவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்றண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

 இரண்டம் கட்டமாக அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு வரும் 30ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாட்ட கவுன்சிலர் பதிக்கும், 225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை அவர்களின் ஆதரவாளர்களுடன் வந்து தாக்கல் செய்து வண்ணம் இருந்தனர். நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.

இந்நிலையில் இது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 ஆயிரத்து 988 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 292 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 505 பேரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 181 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 965 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments