உக்ரைன் நாட்டில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்காவும், குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உக்ரைன் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி  உக்ரைன்  உஜ்கரோத் நேஷனல் யுனிவர்சிட்டி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மசோதா மதரீதியாக மக்களை பிரிக்க பயன்படுத்துவதாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டிய மாணவர்கள் மத்திய அரசின் இந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தனர். எனவே மக்களை பிளவுபடுத்தும் சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த போராட்டத்தில் அங்கு பயின்று வரக்கூடிய கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments