இரண்டு மாதமாக சவுதியில் இருந்தவரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியுடன் தமிழகம் வந்தது..!சவூதியில் தற்கொலை செய்து கொண்ட தமிழரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியுடன் தமிழகம் வந்து சேர்ந்தது.


நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி சின்ன சூண்டி பகுதியைச் சேர்ந்த பரசுராமன், பொட்டு தம்பதியரின் மகன், ராஜ்குமார். 29 வயதான இவர், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்தார்.


இந்நிலையில் அவரது விசா முடிந்து விட்டதால் புதுப்பிக்க முடியாமல் மன உளைச்சளில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ராஜ்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இரண்டு மாதமாக ஊருக்கு உடலை கொண்டு வருவதற்கும் பல முயற்சி மேற்கொண்டு முடியவில்லை.

இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை அறிந்த ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் பேரரசு, சிராஜ் உள்ளிட்டவர்களின் முயற்சியால் ராஜ்குமாரின் உடல் நேற்று தமிழகம் அனுப்பி வைக்கப் பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments