அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்து: இன்று முதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை




அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு நேற்றுடன் (டிசம்பர் 23) முடிவடைந்து .

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நடப்புகல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு மற்றும் 2-ம் பருவத்தேர்வு கடந்த டிசம்பர் 11-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது.

இதற்கிடையே சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டிய வெளியாகி சர்ச்சையானது. அதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்தபுகாரின்பேரில் தற்போது போலீஸார் தீவிர மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அரையாண்டுத்தேர்வுகள் நேற்றுடன் (டிச.23) முடிவடைந்து. அதன்பின் இன்று தொடங்கி (டிச.24) ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments