விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா்வாக்குப்பதிவு உள்ளிட்ட தோ்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்துமுடிந்துள்ளது.

விராலிமலை ஒன்றியம், வெம்மணி ஊராட்சி பெரியமூலிப்பட்டியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடியவரை தோ்தல் பணியில் இருந்த போலீஸாா் பிடித்து கைது செய்துள்ளனா். வாக்குப்பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டு தோ்தல் பணியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் உமாமகேஸ்வரி.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments