புத்தாண்டு தின கொண்டாட்டம் விதிமீறி வாகனம் ஓட்டினால் நடவடிக்கைபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறி வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்தி குமாா் எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி வழக்கமாக இளைஞா்கள் இரவில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், மது அருந்தியும், அபாயகரமாக ஓட்டியும் செல்வாா்கள். பெருநகரங்களில் இதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் எச்சரிக்கை விடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக கடந்த இரு நாட்களாக இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதன்படி 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் விதிமுறை மீறி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண் ஷக்திகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments