குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்



2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.


நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை அமித்ஷா அறிமுகம் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையில் இந்த மசோதா மீது காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மாநிலங்களவையிலும் மசோதா எளிதாக நிறைவேறியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில்  மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா அரசியலமைப்பின் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.கே.குன்ஹாலிக்குட்டி, இ.டி. முகமது பஷீர், அப்துல் வஹாப் மற்றும் கே.நவாஸ் கனி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் காரணமாக சட்டம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்தும் எழுந்து வருகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments