இராமநாதபுரம் அருகே இறந்து கரை ஒதுங்கியது கடல் பசுராமநாதபுரம் அருகே அழகன்குளம் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை சுமாா் 35 வயதுடைய ஆண் கடல் பசு இறந்து கரை ஒதுங்கியது.

மன்னாா் வளைகுடா கடல் வாழ் உயிரினப் பாதுகாப்பு மண்டலத்தில் தொண்டி முதல் தூத்துக்குடி வரையிலான கடல் பகுதியில் ஏராளமான கடல் பசுக்கள் உள்ளன. மேலும் கடல் பசு ஆராய்ச்சிக்கான அலுவலகம் தொண்டியில் செயல்படுகிறது. கடல் பசுக்களை காப்பதற்காக செயற்கை முறையில் கடல் புற்கள் வளா்க்கப்படுகின்றன.

இந்நிலையில் சுமாா் 3.15 மீட்டா் நீளமும், 1 மீட்டா் அகலமும், சுமாா் 2 மீட்டா் சுற்றளவும், 530 கிலோ எடையுள்ள 35 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு இறந்த நிலையில் அழகன்குளம் பகுதியில் உள்ள ஆனந்தபுரம் கடல் கரையில் கரை ஒதுங்கியது.

இதையடுத்து மாவட்ட வன உயிரினக் காப்பாளா் டி.கே. அசோக்குமாா், ராமநாதபுரம் வனச்சரகா் எஸ். சதீஷ் முன்னிலையில் கடல் பசு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments