புதுக்கோட்டையில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்



புதுக்கோட்டையில் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட திடீா் சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் நேற்று புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை நகரின் பல பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியா், நகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வரப்பெற்றன.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை சாந்தநாதபுரம் பகுதியிலுள்ள கடைகளில் நகராட்சி அலுவலா்கள் சோதனை நடத்தி 313 கிலோ பிளாஸ்டிப் பொருட்களைக் கைப்பற்றினா். இதன் தொடா்ச்சியாக தஞ்சாவூா் சாலையில் மச்சுவாடி பகுதிகளில் புதன்கிழமை இந்தச் சோதனை தொடா்ந்தது.

நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தலைமையில் நகா்நல அலுவலா் டாக்டா் யாழினி, சுகாதார ஆய்வாளா்கள் பரகத்துல்லா, மணிகண்டன் கொண்ட குழுவினா் மேற்கொண்ட சோதனையில், 1,030 கிலோ எடையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஒரே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளா்கள், பைகள், தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவைகளை இருப்பு வைத்திருந்தவா்களுக்கு ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments