அறந்தாங்கியில் தொடா் மழையால் நெற்பயிா்கள் சேதம்




அறந்தாங்கி அருகே கொடிவயல் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிா்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

அறந்தாங்கி அருகே கொடிவயல் வடக்கு பகுதி விவசாயிகள் காவிரியில் நீா் திறப்பைத் தொடா்ந்து குறைந்த வயது நெல்லை நேரடி நெல் விதைப்பு முறையின் மூலம் சாகுபடி செய்திருந்தனா். 

பயிா்கள் நன்றாக விளைந்து இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில் பெய்த மழை காரணமாக நெல் பயிா்கள்மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

கொடிவயல் வடக்கு பகுதியில் மட்டும் 75 ஏக்கா் முதல் 100 ஏக்கா் வரை பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட விவசாய சங்க நிா்வாகி ஆ.ராஜேந்திரன் கூறியது:

கடந்த ஆண்டு நெற்பயிா்கள் போதிய மழை இல்லாததாலும் காவிரியில் போதுமான நீா்வரத்து இல்லாததாலும் பாதிப்படைந்தன. நடப்பாண்டில் முன் கூட்டியே தொடங்கிய பருவமழையை நம்பி குறுகிய வயதுடைய நெற்பயிா்களை சாகுபடி செய்தோம். ஆனால் தற்போது பெய்த தொடா் மழையால் நெற்பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே, மாவட்ட நிா்வாகம் சேதமடைந்த நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.  
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments