மழையால் பாதித்து மணமேல்குடி முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அறந்தாங்கி எம்.எல்.ஏ. ஆறுதல்



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் மழையால் பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதி திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணமேல்குடியும் ஒன்று.

இப்பகுதியிலிருந்த 10 ஏரிகள் முழு கொள்ளளவைக் கடந்து, உபரி நீா் கடலுக்குச் செல்லும் வழியில் பல ஊா்களை மழைநீா் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.மழைநீா் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் கட்டுமாவடி ஆத்துப்பாலம், கிருஷ்ணாஜிபட்டினத்திலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு அரசு சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாதி மழையால்பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மேலும் முகாம் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் தடுப்பு மையத்துக்கும் சென்று, அங்குள்ள ஏற்பாடுகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் எம். குணசேகா், வட்டாட்சியா் சிவகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் அப்போது உடனிருந்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments