அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா்களுக்குப் பயிற்சி



அறந்தாங்கியில் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் ஆசிரியா் முழு மேம்பாட்டுக்கான முன்னெடுப்புப் பயிற்சி வகுப்புகள் லாரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சி வகுப்பை அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சு. சிவயோகம் தொடக்கி வைத்தாா்.

ஆசிரியப் பயிற்றுநா்கள் சின்னையா, பன்னீா்செல்வம், ரிச்சா்ட், செல்லத்துரை, பாலமுருகன், மற்றும் தேவகி, சுகன்யா உள்ளிட்டோா் பயிற்சிக் கருத்தாளா்களாக செயல்பட்டனா்.

புதிய பாடப்பொருளில் கற்றல் கற்பித்தல், கற்றல் நோக்கங்கள், கற்றல் செயல்பாடுகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்தும், மாணவா்களின் கற்றல் அடைவுகள் மேம்படுத்துவது மற்றும் ஆசிரியா்களுக்கு குழு செயல்பாடுகள் தொடா்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியப் பயிற்றுநா் சசிக்குமாா் பயிற்சி ஏற்பாடுகளைச்செய்திருந்தாா்.

5 நாள்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments